திருச்செந்தூர் முருகன் கோயிலில் ‘சர்ப்பகாவடி’ எடுத்தால் 7 ஆண்டுகள் சிறை.!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சார்பகாவடி எடுத்து வந்தால் 3 முதல் 7 ஆண்டுகள் வரையில் சிறை – வனத்துறை அறிவிப்பு.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி (முருகன் கோயில்) கோயிலுக்கு பாதையாத்திரை வரும் பக்தர்கள் சிலர் சர்ப்பகாவடி எடுத்து வருவார்கள். அதாவது, பாம்பை கூண்டில் வைத்து அதனை தலையில் வைத்து கவடி எடுத்து வருவார்கள்.
அதற்கு தற்போது வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்கள் சர்ப்பக்காவடி எடுத்து வந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்கப்பெறும் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.