நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, அந்தமான் செல்லும் அமித் ஷா.!
நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜன-23இல் அமித் ஷா அந்தமான் செல்கிறார்.
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளைப் போற்றும் வகையில் ஜனவரி-23ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு செல்ல இருக்கிறார். டிசம்பர் 30, 1943 அன்று போர்ட் பிளேயரில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் நேதாஜி முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.
நேதாஜி ஸ்டேடியம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்ட அதே மைதானத்திற்கு, அமித்ஷா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக 2021 இல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அந்தமானின் போர்ட் பிளேருக்கு வந்திருந்தார்.