இந்தியாவுக்கு எதிரான, நியூசிலாந்து டி20 அணி அறிவிப்பு.!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான, 15பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டிகள் ஜனவரி-18இலும், டி-20 போட்டிகள் ஜனவரி-27 இலும் தொடங்குகிறது. இதில் டி-20 போட்டிகளில் விளையாடும் 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மிட்சேல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியில், கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் இடம் பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளர் பென் லிஸ்டர் மற்றும் ஆல்-ரவுண்டர் ஹென்றி ஷிப்லி ஆகியோர் இந்த டி-20 களில் முதன்முறையாக அறிமுகம் ஆகஉள்ளனர்.
நியூசிலாந்து அணி: டெவோன் கான்வே, டேன் கிளீவர் (W), ஃபின் ஆலன், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல், மைக்கேல் ரிப்பன், மிட்செல் சான்ட்னர் (C), லாக்கி பெர்குசன், பெஞ்சமின் லிஸ்டர், பிளேர் டிக்னர், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஹென்ரி ஷிப்லி, இஷ் சோதி