உசைன் போல்ட்டின் கணக்கில் இருந்து மில்லியன் கணக்கான டாலர்கள் காணவில்லை.!
முதலீட்டு நிறுவனத்தில் உசைன் போல்ட்டின், கணக்கில் இருந்து மில்லியன் கணக்கான டாலர்கள் காணவில்லை என தகவல்.
எட்டு முறை ஒலிம்பிக் சாம்பியனான உசைன் போல்ட்டின், கணக்கில் இருந்து மில்லியன் கணக்கான டாலர்கள்(பல கோடி ரூபாய்) காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
உசைன் போல்ட், ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் (எஸ்எஸ்எல்) முதலீட்டு நிறுவனத்தில் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்தார், எஸ்எஸ்எல் இல் போல்ட், அவரது கணக்குகளில் திடீரென்று இந்த குளறுபடியை முதலில் கவனித்ததாகக் கூறப்படுகிறது.
ஜமைக்கா நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின் படி, போல்ட்டின் மேலாளர் நுஜென்ட் வாக்கர் க்ளீனர் கூறுகையில், ஜமைக்காவின் நிதிப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிச் சேவைகள் ஆணையம் ஆகியவை எஸ்எஸ்எல்) வழக்கை விசாரித்து வருகின்றன.
மேலும் இந்த வழக்கின் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன, விசாரணை நடந்துகொண்டிருக்கும் காரணமாக, தன்னால் எந்த விவரங்களையும் வெளியிட முடியாது என்று வாக்கர் கூறினார்.