தொடரூம் சமூக அநீதி…குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவாகரத்துக்கு இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்.!
புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்வீட்டர் பக்கத்தில் கோபத்துடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது ” தொடரூம் சமூக அநீதி. புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடூம் கண்டனங்கள்.
வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்” என பதிவிட்டுள்ளார்.