தேவைக்கேற்ப மெட்ரோ ரயில் இயக்கப்படும் -நிர்வாகம்
இன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நெரிசல் மிகுந்த நேரங்களில் நீளம் மற்றும் பச்சை வழித்தடங்களில் தேவைக்கேற்ப ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் வெளியூர் செல்வது வழக்கம். இந்த நிலையில் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அந்த வகையில் மெட்ரோ நிர்வாகமும் சொந்த ஊர் செல்லும் மக்கள் வசதிக்காக தேவைக்கேற்ப ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. இன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நெரிசல் மிகுந்த நேரங்களில் நீளம் மற்றும் பச்சை வழித்தடங்களில் தேவைக்கேற்ப ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.