#Breaking : ஜனவரி 31இல் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் துவக்கம்.!
ஜனவரி 31ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் கூட்டதொடர் வரும் ஜனவரி மாதம் 31ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
இதில் முதற்கட்ட அமர்வு ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட அமர்வு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடைபெற்று வரும் பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்படும் கடைசி விரிவான பட்ஜெட் கூட்டத்தொடர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கடுத்ததாக சிறு பட்ஜெட் மட்டுமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.