அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு..! – மத்திய உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு இந்த வாரம் முதல் வழங்கப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இதுவரை Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் Z பிரிவு பாதுகாப்பு இந்த வாரம் முதல் வழங்கப்படுகிறது.
அண்ணாமலை வீடு, அவர் தங்கும், செல்லும் இடங்களில் 24 மணிநேரமும் 33 கமாண்டோ வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்குவார்கள்.