புதிய தொழிற்சாலைகளில் 80 சதவீதம் பேர் தமிழர்கள்.! அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.!
புதிதாக தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளில் 80 சதவீதம் தொழிலாளர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். – அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.
தமிழகத்தில் செயல்படும் தனியார் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறதா என்ற கேள்வி இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கேட்கப்பட்டது. அதற்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் கூறினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், ‘ தமிழகத்தில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு குறித்து ஆராய்ந்து வருகிறோம். புதிதாக தொடங்கப்படும் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். அது குறித்த ஆய்வை அண்மையில் நடத்தினோம். அதில் புதிதாக தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளில் 80 சதவீதம் தொழிலாளர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. என தமிழக தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.