உயிர் போகும் அளவிற்குக் கொண்டாட்டங்கள் தேவையில்லை… இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அட்வைஸ்.!

Default Image

கடந்த ஜனவரி 11-ஆம் தேதி விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. அஜித் நடித்த துணிவு திரைப்படம் பார்க்க சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு  பரத் எனும் 19-வயது இளைஞர் வந்திருந்தார்,

அப்போது தனது நண்பர்களுடன் மெதுவாக  சென்ற லாரி ஒன்றின் மீது ஏறி நடனம் ஆடியுள்ளார்.அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென பரத்குமார் தவறி ரோட்டில் விழுந்தார். இதனால் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்த பரத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் ரசிகர்களுக்கு இது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என அறிவுரையை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜும் சமீபத்திய பேட்டி ஒன்றில் அறிவுரையை வழங்கியுள்ளார்.

இது குறித்து பேசிய ” சினிமா என்பது பொழுதுபோக்குக்கானது மட்டுமே.
உயிரைவிடும் அளவிற்கு அதற்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை. சந்தோஷமாகச் சென்று படம் பார்த்துவிட்டு வீடு திரும்பினாலே போதும். உயிர் போகும் அளவிற்குக் கொண்டாட்டங்கள் தேவையில்லை” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்