5 லட்சம் ரூபாய்க்காக அண்ணனை கொன்ற தம்பி.! முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.!
மறைந்த முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் அவரது சகோதரர் ஆதம் பாஷா கைது செய்யப்பட்டார்.
சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் கடந்த ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார் என கூறப்பட்டு, பின்னர் அவரது மரணத்தில் சந்தேகம் என காவல்துறையினர் விசாரணை தொடங்கினர்.
அதில், மஸ்தான் கொலை செய்யப்பட்டது தெரிய வந்து, கார் ஓட்டுனர் இம்ரான், உறவினரான சித்தா டாக்டர், சுல்தான் அகமது, நண்பர்கள் நசீர், தவ்பிக், லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் மேலும் ஒரு திருப்பமாக , காவல் துறை விசாரணையில் போன் கால் உரையாடலை வைத்து ஆய்வு செய்து, மஸ்தான் கொலை வழக்கில் அவரது சகோதரர் ஆதம் பாஷா அதிரடியாய் கைது செய்யப்பட்டார்.
அவருடன் நடத்திய விசாரணையில் 5 லட்சம் ரூபாய் கடனை திரும்ப கேட்டதால் நண்பர்கள் உதவியுடன் தனது அண்ணன் மஸ்தானை கொலை செய்த்தாக சோகோதரர் ஆதம் பாஷா காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.