பொங்கல் தொகுப்பு இதுவரை 92% பேருக்கு விநியோகம் – உணவுத்துறை
இன்று முதல் டோக்கன் இல்லாதவர்களும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பெறலாம் என அறிவிப்பு.
பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி, கரும்பு மற்றும் சக்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி சென்னையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், தமிழக முழுவதும் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு இதுவரை 92 சதவீதம் பேருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் டோக்கன் இல்லாதவர்களும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.