டெல்லி விரைகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பிற்பகல், 1.30 மணிக்கு டெல்லி செல்கிறார்.
நேற்று ஆளுநரின் விவகாரம் தொடர்பாக டெல்லியில் குடியரசுத் தலைவருடன் தமிழக அரசின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர். எம்.பி டி.ஆர்.பாலு, சட்ட அமைச்சர் ரகுபதி ஆகியோர் குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பிற்பகல், 1.30 மணிக்கு டெல்லி செல்கிறார். ஆளுநருக்கு எதிராக திமுக குடியரசு தலைவரிடம் புகார் தெரிவித்திருக்கும் நிலையில் ஆளுநரின் டெல்லி வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது. இன்று டெல்லி செல்லும் ஆளுநர், நாளை மாலை தான் சென்னை திரும்புகிறார்.