இவர் நாட்டிற்கு சேவை செய்து சமத்துவ அரசியலை வலுப்படுத்தியவர் – மல்லிகார்ஜுன கார்கே
சரத் யாதவின் மறைவு எனக்கு வருத்தமளிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே இரங்கல்.
முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் காலமானார். முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ்(75) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், ‘ சரத் யாதவின் மறைவு எனக்கு வருத்தமளிக்கிறது. பல தசாப்தங்களாக சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக நாட்டிற்கு சேவை செய்து சமத்துவ அரசியலை வலுப்படுத்தியவர். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.’ என தெரிவித்துள்ளார்.