ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை விதித்து தலிபான்கள் உத்தரவு..!
ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை விதித்து தலிபான்கள் உத்தரவு
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வனத்தை இருந்து அந்த நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெண்கள் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், தற்போது, ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை விதித்து தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, பெண்கள் தங்களின் நோய்களுக்கு பெண் டாக்டர்களிடம் மட்டுமே சிகிச்சை பெறவேண்டும்; மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் இதனை கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.