உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கனமழையினால் மசூதியின் தூண் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் கடந்த 24 மணிநேரத்திற்கும் மேலாக கனத்த மழை பெய்து வருகிறது. மழையின் எதிரொலியாக இங்குள்ள உன்னாவ் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், மின்னல் தாக்குதல், மரங்கள் சாய்ந்து விழுந்த சம்பவங்கள் மற்றும் வீடுகள் இடிந்த விபத்துகளில் 57 பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15 பேரும், பீகார் மாநிலத்தில் 19 பேரும், ஜார்கண்ட் மாநிலத்தில் 23 பேரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கனமழை மற்றும் சூறைகாற்று காரணமாக மசூதி ஒன்றின் தூண் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.