சீக்கிய டர்பன் அணிய மறுத்த ராகுல் காந்தி.? பாஜக பிரமுகர் பகிர்ந்த வீடியோ.!
ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி டர்பன் அணிய மறுக்கிறார் என ஒரு விடியோவை பாஜக முக்கிய தலைவர் ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
பாஜக முக்கிய தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா நேற்று (புதன்கிழமை) தனது டிவிட்டர் ஒரு விடீயோவை பகிர்ந்து உள்ளார். அதில் அண்மையில் ராகுல் காந்தி பஞ்சாப் பொற்கோவில் செல்கையில் சீக்கியர்கள் அணியும் டர்பன் அணிந்து தரிசனம் செய்தார்.
அது குறித்து, மஞ்சிந்தர் சிங் சிர்சா பதிவிடுகையில், ‘ இப்போது அணிய மாட்டேன் என ராகுல் காந்தி மறுக்கிறார். பாரத ஒற்றுமை யாத்திரையில் ‘டி-ஷர்ட்’ முதல் பல்வேறு உடைகள் வரை… ஒவ்வொரு செயலும் ஒரு எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்டின் ஒரு பகுதியாகும். காந்தி குடும்பத்தின் சீக்கியர்களுக்கு எதிரான முகம் மீண்டும் மீண்டும் அம்பலமானது. என பதிவிட்டுள்ளார்.