பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடு! ஆப்கனுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகிய ஆஸ்திரேலியா.!
பெண்களுக்கு எதிரான தலிபான்களின் கட்டுப்பாடுகள் விதித்ததையடுத்து, ஆப்கனுக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா புறக்கணித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக நிறைய கட்டுப்பாடுகளை, தாலிபான் அரசு விதித்துள்ளது. பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், தலிபான்களின் தலைமையிலான அரசு சமீபத்தில் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. முன்னதாக, பெண்கள் விளையாட்டில் பங்கேற்பதற்கும், தலிபான்கள் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.
தாலிபான்களின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா விலகியுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) விளக்கமளித்துள்ளது.