குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் – ஒப்புதல் கொடுத்த ஆளுநர்
ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான கோப்பிற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல்.
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். அரசின் எந்தவித திட்டத்தின் மூலமும் உதவி தொகை பெறாத, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான கோப்பிற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மாநிலத்தில் எந்த விதமான உதவி தொகையும் பெறாத வருமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.