மருத்துவர்கள் வேலைநிறுத்தம்.. குற்றவாளிகளை கைது செய்யும் வரை நீடிக்கும்.!
ஹரியானாவில் தனியார் மருத்துவமனை இதய நோய் மருத்துவர் தாக்கப்பட்டதை தொடர்ந்து அம்மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தின் ஹிசாரில் உள்ள தனியார் மருத்துவமனையின் இதயநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரவீந்தர் குப்தா சபீபத்தில் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி மருத்துவர்கள் அனைவரும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) ஹிசார் பிரிவு தலைவர் டாக்டர் ஜே பி நல்வா கூறுகையில் வேலைநிறுத்தக் காலத்தில் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் புதிய நோயாளிககளை OPD (Out patient Department) சேர்ப்பது மற்றும் அவசரகாலச் சேவைகளை மேற்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார். குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த சம்பவத்தையடுத்து டாக்டர் குப்தாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் ஹிசார் போலீஸ் சூப்பிரண்டு (எஸ்பி) லோகேந்தர் சிங்கை சந்தித்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டி வலியுறுத்தியுள்ளனர்.