ஜார்கண்டில் 20 பேருடன் சென்ற பிக்அப் வேன் கவிழ்ந்து விபத்து! 3 பேர் பலி மற்றும் பலர் காயம்.!
ஜார்கண்ட் மாநிலத்தில் 20 பேருடன் சென்ற பிக்கப் வேன், கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் செரைகேலா-கார்ஸ்வான் மாவட்டத்தில், பிக்கப் வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால், வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் 3 தொழிலார்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
கட்டுமானப்பொருட்கள் நிரப்பப்பட்ட சாக்குகளுடன் சுமார் 20 பேர் அந்த வேனில் பயணித்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். காயமடைந்தவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேற்கு சிங்பூமில் உள்ள சாய்பாசாவிலிருந்து செரைகேலா-கர்ஸ்வான் மாவட்டத்தில் உள்ள ராஜ்நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வேன் விபத்துக்குள்ளானது என்று கூறப்படுகிறது.
போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், காயமடைந்தவர்களில் 8 பேர் நிலை மோசமானதில் ஜாம்ஷெட்பூரில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.