INDvsSL ODISERIES: இலங்கை அணி ஆல்-அவுட்! இந்தியாவிற்கு 216 ரன்கள் வெற்றி இலக்கு.!
இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, 215 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்தியா-இலங்கை அணிகள் இடையே ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணியில், தொடக்க வீரரான அவிஷ்கா பெர்னாண்டோ 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு இறங்கிய குஷல் மெண்டிஸ்(34 ரன்கள்) மற்றும் நுவைந்து பெர்னாண்டோ(50 ரன்கள்) இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்கள் குவித்தனர். அடுத்து களமிறங்கிய அனைவரும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து மூட்டையைக் கட்டினர். இதனால் அந்த அணி விக்கெட்களை இழந்து தடுமாறியது.
இறுதியில் இலங்கை அணி 39.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் சிராஜ் சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்களையும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.