அதிமுக ஆட்சியில்தான் போதைப்பொருள் விற்பனை அதிகம் – முதலமைச்சர்
போதை பொருட்களை தடுப்பதில் புதிய வரலாறு படைத்துள்ளது தமிழ்நாடு அரசு என முதலமைச்சர் பேச்சு.
அதிமுக ஆட்சியில் கஞ்சாவும், குட்காவும் தலைவிரித்தாடியது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் கேள்வி நேரத்தின்போது, போதைப்பொருட்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், போதைப்பொருட்களை வேரோடு ஒழிப்பதுதான் திமுக ஆட்சியின் இலக்கு.
போதைப் பொருட்களை தடுப்பதில் ஜன.3-ல் ஆய்வு கூட்டம் நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். கடந்த ஆட்சியில் நடவடிக்கை இல்லை என்பதால் செய்தி வரவில்லை. நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். போதைப்பொருள் விவகாரத்தில் கடந்த ஆட்சியில் கண்டும் காணாமல் இருந்ததால் தான் நாங்கள் தீவிர நடவடிக்கை எடுக்கிறோம் என தெரிவித்தார்.
நீங்கள் எடுத்த நடவடிக்கைக்கும், நாங்கள் எடுத்த நடவடிக்கைக்கும் குட்கா வழக்கே சாட்சி. 10 ஆண்டு கால ஆட்சியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நடத்தப்பட்டதே கிடையாது. தற்போது, போதை பொருட்களை தடுப்பதில் புதிய வரலாறு படைத்துள்ளது தமிழ்நாடு அரசு எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு முதல்வர் முக ஸ்டாலின் பதிலளித்தார்.