டெல்லியில் ஒரு பெண்ணிடம் பாகிஸ்தான் அரசு ஊழியர் பாலியல் ரீதியில் அத்துமீறல்.!
டெல்லியில் செயல்படும் பாகிஸ்தான் அலுவலகத்தில் விசா வாங்க சென்ற ஒரு பெண்ணிடம் அங்குள்ள அதிகாரி பாலியல் ரீதியில் அத்துமீறியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் விசா வழங்கும் அலுவலகத்தில் பணியாற்றும் ஆசிப் எனும் ஊழியர் மீது ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அந்த பெண் கடந்த ஆண்டு பாகிஸ்தான் அலுவலகத்திற்கு விசா வாங்குவது தொடர்பாக சென்றுள்ளார்.
அப்போது, அந்த பெண்ணிடம் ஆசிப் எனும் ஊழியர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்துள்ளாராம். அவர், பேசுகையில் அந்த பெண்ணிடம், தனது பாலியல் ஆசைகளை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும் என பெண்ணிடம் கேட்டுள்ளார். அப்போது அந்த பெண் மிகவும் அசௌகரியமாக இருந்ததாகவும்,
மேலும் அந்த பெண்ணிடம், தனக்கு உடலுறவு கொள்ள யாராவது இருக்கிறார்களா என்றும் அந்த ஊழியர் கேட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் அண்மையில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.