பொங்கலன்று தேர்வு – ஜன.13ல் மார்க்சிஸ்ட் போராட்டம்!
எஸ்பிஐ தேர்வு தேதியை மாற்றக்கோரி ஜனவரி 13-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என சு.வெங்கடேசன் எம்பி அறிவிப்பு.
பொங்கல் திருநாளில் நடத்தப்படும் எஸ்பிஐ தேர்வு தேதியை மாற்றக்கோரி ஜனவரி 13-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமையகத்தை முற்றுகையிட்டு ஜனவரி 13ல் காலை 10.30க்கு மார்க்சிஸ்ட் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என சு.வெங்கடேசன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். பொங்கல் திருநாளில் வங்கி கிளார்க் தேர்வு தேதியை மாற்ற கோரியும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் குற்றசாட்டியுள்ளார்.