சீனாவில் கூட்டத்திற்குள் காரை ஓட்டிச் சென்று விபத்து! 5 பேர் பலி, 13 பேர் காயம்.!
சீனாவில் மக்கள் கூட்டத்திற்குள், காரை வேகமாக ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்திய இளைஞர் கைது.
சீனாவில் குவாங்சூ நகரில், 22வயது நபர் ஒருவர் காரை வேகமாக ஓட்டிச்சென்று, மக்கள் சாலையை கடந்து செல்லும் பாதையில் காரை செலுத்தியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த நபர் காரை விட்டு இறங்கி பணத்தாள்களை எடுத்து வெளியில் வீசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த நபர் வேண்டுமென்றே மக்களை குறிவைத்து, காரை ஓட்டியதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். அவர் சமூகத்தின் மீதான தனது கோவத்தை, வெறுப்புணர்வை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தையடுத்து இளைஞரை, சீன போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
Warning! Graphic. Today, at Zhengjia Square in #Guangzhou City 广州正佳广场, #CCPChina, a black BMW repeatedly rammed and crushed pedestrians, causing 5 deaths & 13 injuries. Cause unknown at this time. It is suspected that someone wanted revenge on society.#China #CCP pic.twitter.com/brqbJkHBHO
— Inconvenient Truths by Jennifer Zeng 曾錚真言 (@jenniferzeng97) January 11, 2023