போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. நிர்வாண வீடியோ.! ஹரியானா பெண் பரபரப்பு புகார்.!
ஹரியானா மாநிலத்தில் ஒரு பெண்ணை, நிறுவன மேலாளர் உணவில் போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என புகார் எழுந்துள்ளது.
ஹரியானா மாநிலம், குருகிராமில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது சம்பள விவகாரம் தொடர்பாக தனது நிறுவன மேலாளர் அழைத்ததன் பெயரில் ஒரு மாலுக்கு சென்றுள்ளார்.
அந்த மாலுக்கு வெளியே இருவரும் பேசுகையில் அந்த பெண்ணிற்கு வழங்கப்பட்ட உணவில் மேனஜர், போதை மருந்து கலந்து கொடுத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த பெண்ணை மேலாளர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் , மேலும் அந்த பெண்ணை நிர்வாண வீடியோ எடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது நிறுவன மேலாளர் மீது காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.