10 வயது சிறுவனுக்கு பல் அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதலமைச்சர்..!
10 வயது சிறுவனுக்கு பல் அறுவை சிகிச்சை மேற்கொண்ட திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சாஹா
திரிபுரா மாநில முதலமைச்சராக இருப்பவர் மாணிக் சாஹா. இவர் 7 மாதங்களுக்கு முன் தான் அமமாநில முதலமைச்சராக பதவி ஏற்றார். இவர் முதலமைச்சராக பணியாற்றுவதர்க்கு முன் பல் மருத்துவராக பணியாற்றியுள்ளார்.
இதனையடுத்து, தனது பழைய பணியிடமான திரிபுரா மருத்துவக் கல்லூரிக்கு மாணிக் சாஹாசென்றுள்ளார். அங்கு, மருத்துவர்கள் குழு உதவியுடன் அந்த பையனுக்கு அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
ஒதுக்குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சிறுவன் நலமுடன் இருப்பதாகவும், நீண்ட இடைவெளிக்குப் பின் அறுவை சிகிச்சை செய்தாலும் எந்த சிரமமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.