மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! கால வரம்பற்ற விடுமுறை அறிவிப்பு.!
அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு ஜனவரி 16ஆம் தேதி முதல் கால வரம்பற்ற விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு அந்நிறுவனம் ஓர் சூப்பரான அறிவிப்பை அறிவித்துள்ளது. அதில், மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் ஜனவரி 16 முதல் கால வரம்பற்ற விடுமுறையை எடுத்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது .
அதாவது, நிறுவன விதிப்படி ஜனாவர் 16க்கு பிறகு உள்ள 10 கார்ப்பரேட் விடுமுறைகள், நோய் மற்றும் மற்ற துக்க நிகழ்வுகளுக்கான அத்திவாசிய விடுமுறைகளில் காலவரம்பற்ற விடுமுறையை எடுத்துக்கொள்ளலாம் எனவும், ஒருவேளை அப்படி விடுமுறை எடுக்கவில்லை என்றால் அதற்கான விடுமுறை நாள் சம்பளத்தை ஏப்ரல் மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.