இன்றுடன் முடிவுக்கு வந்தது வடகிழக்கு பருவமழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தமிழகத்தில் அக்டோபர் 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை, இன்றுடன் விலகியது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் அக்டோபர் 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை, இன்றுடன் விலகியது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை விலகியதால் குளிர் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் உறைபனி நிலவும் என்றும், உள்மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.