#BREAKING: போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ஏழு கோடியே ஒரு இலட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு.
பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி, முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின் பேரில், பொங்கல் திருநாளை முன்னிட்டு 1,17,129 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழாண்டு அரசு அறிவித்துள்ளது. பணிபுரிந்த காலத்திற்கேற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும்.
2022-ஆம் ஆண்டில் 200 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு தலா ரூ.625 சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும். 151 நாட்கள் முதல் 200 நாட்களுக்கு குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195 சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதுபோன்று 91 முதல் 151 நாட்கள் வரை பணிக்கு வந்த ஊழியர்களுக்கு தலா ரூ.85 சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிற்கிணங்க பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு இலட்சத்து பதினேழாயிரத்து நூற்று இருபத்தொன்பது போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ஏழு கோடியே ஒரு இலட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும்#CMMKSTALIN #TNDIPR @mkstalin pic.twitter.com/KEc7SHLpGI
— TN DIPR (@TNDIPRNEWS) January 12, 2023