பீகாரில் பரபரப்பு.! போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மீது போலீசார் தாக்குதல்.?
பீகார் மாநிலத்தில் நள்ளிரவில் விவசாயிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் கடந்த 85 நாட்களாக அனல் மின் நிலைய நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பக்சர் மாவட்டம் பனார்பூர் கிராமத்தில் நள்ளிரவில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் உருவானது. இதில் போலீசார் சிலர் விவசாயிகளை வீட்டிற்குள் புகுந்து தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இதில் போலீசார் தரப்பில் கூறுகையில், விவசாயிகள் தான் முதலில் கற்களை கொண்டு தாக்கியதாகவும், போலீஸ் வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.