அயலக தமிழர்களுக்கான புதிய திட்டங்கள் – முதலமைச்சர் அறிவிப்பு!
அயலக தமிழர் தின விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், அயலக தமிழர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற அயலக தமிழர் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின், அயலக தமிழர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பில், அயல்நாடுகளில் பணிக்கு சென்று எதிர்பாராத விதமாக இறந்து விடுவோர் குடும்பத்துக்கு மாத ஓய்வூதியம் திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்து விரிவான தரவுகள் ஆவணப்படுத்தப்படும். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்களில் ஆண்டுக்கு 200 பேர் தேர்வு செய்யப்படுவர். அம்மாணவர்கள், தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவுக்காக, தமிழ்நாடு அழைத்து வரப்படுவர். அயல்நாடு செல்லும் தமிழர்கள் குறித்து தரவு தளம் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்.