இடைத்தேர்தல் பணியை தொடங்கியது அதிமுக!
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பணியை தொடங்கியது அதிமுக.
ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவி காலியானதாக சட்டமன்ற செயலகம் நேற்று அறிவித்திருந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவை அடுத்து பேரவை செயலகம் அறிவித்தது.
தொகுதி காலியாக இருக்கும் தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பணியை தொடங்கியது அதிமுக. பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.