பொங்கல் கொண்டாட்டம்….துணிவு , வாரிசு படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி..!
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் வாரிசு திரைப்படமும், நேற்று ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் துணிவு திரைப்படம் நேற்று அதிகாலை 1 மணிக்கும், வாரிசு திரைப்படம் 4 மணிக்கும் வெளியானது.
இதனையடுத்து, வரும் ஜனவரி 13, 14, 15,16 ஆகிய தேதிகளில் வாரிசு, துணிவு படங்களுக்கு அதிகாலை சிறப்பு காட்சிகளாக வெளியிட தமிழக அரசு தடை விதித்திருந்தது. அதைப்போல, உயரமான பேனர், வைத்து பாலாபிஷேகம் செய்யவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, திரைப்பட விநியோகஸ்தர்கள் அரசிடம் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வாரிசு, துணிவு படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கி அரசனை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 12, 13 மற்றும் ஜனவரி 18 ஆகிய 3 நாட்கள் தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜன 14, 15, 16, 17ம் தேதிகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி உள்ள நிலையில் 3 நாள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் அஜித் ரசிகர்கள் இந்த பொங்கலை துணிவு, வாரிசு படத்தை பார்த்து உற்சாகத்துடன் கொண்டாடவுள்ளார்கள்.