நியாயவிலை கடைகளில் கண் கருவிழி பதிவு மூலமாக பொருட்களை பெறுவதற்கு நடவடிக்கை – அமைச்சர் சக்கரபாணி
நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவு மூலமாக பொருட்கள் பெற முடியவில்லை என்றால், கண் கருவிழி பதிவு மூலமாக பொருட்களை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சக்கரபாணி பேச்சு.
இன்றைய சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பேசுகையில், நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவு மூலமாக பொருட்கள் பெற முடியவில்லை என்றால், கண் கருவிழி பதிவு மூலமாக பொருட்களை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நியாய விலைக்கடைகளில் வழங்கக்கூடிய பொருட்களை பாக்கெட் மூலமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.