கணினிக் கோளாறால் தடைபட்ட ஆயிரக்கணக்கான விமானங்கள், இயங்க ஆரம்பித்தன.!

Default Image

கணினிக் கோளாறால், அமெரிக்கா முழுவதும் தரையிறங்கிய ஆயிரக்கணக்கான விமானங்கள் மீண்டும் செயல்படத்தொடங்கின.

அமெரிக்கா முழுவதும் கணினியின் தொழில்நுட்பக்கோளாறால், இன்று ஆயிரக்கணக்கான விமானங்கள் தரையிறங்கின. கணினியின் கோளாறு காரணமாக அமெரிக்க பெடரல் ஏவியேசன் அமைப்பு, அனைத்து உள்நாட்டுப் விமானங்களையும் இடைநிறுத்துமாறு விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதே நேரத்தில் சைபர் தாக்குதலுக்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் அமெரிக்க அதிபர் பைடன் கூறியிருந்தார். 3,700 க்கும் மேற்பட்ட விமானங்கள் அமெரிக்காவிற்குள், உள்ளே மற்றும் வெளியே தாமதமாக்கப்பட்டன, 640 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

பலமணி நேரத்திற்கு பிறகு தற்போது அமெரிக்காவில் படிப்படியாக மீண்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இன்னும் தொழிநுட்பக்கோளாறுக்கான காரணம் குறித்து நாங்கள் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம் என்று அமெரிக்க பெடரல் ஏவியேசன் அமைப்பு தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்