இந்த 2 படம் வருவது தான் தமிழகத்தின் பிரச்சனையா.? அன்புமணி ராமதாஸ் கேள்வி.!
தேசிய கீதத்தில் திராவிடம் எனும் வார்த்தை வருகிறது. அதனால் தேசியகீதம் பாடாமல் ஆளுநர் தவிர்த்துவிடுவாரா.? – அன்புமணி ராமதாஸ் கேள்வி.
சட்டப்பேரவையில் ஆளுனர் நடந்து கொண்ட விதம் குறித்து பாமக கட்சியின் முக்கிய தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தேசிய கீதத்தில் திராவிடம் எனும் வார்த்தை வருகிறது. அதனால் தேசியகீதம் பாடாமல் ஆளுநர் தவிர்த்துவிடுவாரா.? என கேள்வி எழுப்பினார் .
அவர் மேலும் பேசுகையில், தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சரியான நிவாரணம் கிடைக்கவில்லை. பொங்கலுக்கு கொடுத்த கரும்பில் 5 அடி கரும்பா.? 6 அடி கரும்பா என்பதில் பிரச்சனை இருக்கிறது. நெய்வேலியில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் நிலக்கரி சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ளது.
மேலும் கூறுகையில், தமிழகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது இரு நடிகர்களின் படங்கள் வருவது, அந்த படங்களின் டிக்கெட் குறித்து பேசுவது தவறு எனவும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார்.