62 ஆண்டுகால பாரம்பரியம்.. இரண்டு லிட்டர் எண்ணெய் குடித்த பழங்குடி பெண்!
தெலுங்கானாவில் 62 வயதான பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, 2 லிட்டருக்கு மேல் எண்ணெய் குடித்த பழங்குயின பெண்.
தெலுங்கானா மாநிலத்தில் காம்தேவ் ஜதாரா என்று அழைக்கப்படும் வருடாந்திர ஐந்து நாள் கண்காட்சியின் 62 ஆண்டுகால பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, ஒரு பழங்குடியினப் பெண் அமைதிக்காக வீட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு லிட்டருக்கு மேல் உள்ள எள் எண்ணெயைக் குடித்துள்ளார்.
1961-ஆம் ஆண்டு முதல் தொடசம் குலத்தைச் சேர்ந்த 20 தந்தை வழி சகோதரிகளால் இந்த பாரம்பரியம் நடைபெற்று வருகிறது, அவர்களில் ஒருவர் மெஸ்ரம் நாகுபாய் ஆவார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பாரம்பரியத்தை தொடர நாகுபாய் பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.