அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது சட்டவிரோதம்! இருதரப்புக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு!
வரும் திங்கள்கிழமை இருதரப்பும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை காரசார விவாதத்துடன் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது, அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது சட்டவிரோதம் என ஓபிஎஸ் தரப்பில் மீண்டும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பான நோட்டீஸ் முன்கூட்டியே வழங்கவில்லை என கூறியுள்ளார்.
நோட்டீஸில் இடம்பெறாத விஷயங்களை அதிமுக பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டுவந்து நிறைவேற்றி இருக்கிறார்கள். அதிமுகவில் இல்லாத 2 பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டதே பழனிசாமி தரப்பு தான். 2 பதவிகளை உருவாக்கி அனைத்து நடவடிக்கையும் முறையாக சென்றபோது குழப்பம் விளைவிக்க முயற்சி. குழப்பங்களை விளைவிக்கும் வகையில் 2 பதவிகளையும் நீக்க வேண்டும் என சொல்வதும் பழனிசாமி தரப்பே எனவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வாக இருந்தது. தேர்தலில் யாரும் போட்டியிடாததால் இப்பதவிகள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டது. அடிப்படை உறுப்பினர்கள் தான் உயர்மட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பது எக்காலத்திலும் மாற்ற முடியாத விதி எனவும் ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. எனவே, வரும் திங்கள்கிழமை இருதரப்பும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.