கோல்டன் குளோப் விருது பெற்ற “நாட்டு நாட்டு” பாடல்.! வாழ்த்து மழையில் ஆர்.ஆர்.ஆர் படக்குழு.!

Default Image

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் “ஆர்ஆர்ஆர்” திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. மூன்று மொழிகளில் படம் வெளியான நிலையில், படம் பெரிய வெற்றியை பெற்று உலக அளவில் ரூ.1800 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

RRRForOscars
RRRForOscars [Image Source: Twitter ]

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருந்தார்.வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்த நிலையில், பல விருதுகளையும் குவித்து வருகிறது, அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை ‘நாட்டு நாட்டு’ பாடல் இன்று வென்றுள்ளது.

RRRGoesGlobal
RRRGoesGlobal [Image Source : Twitter ]

95வது ஆஸ்கர் விழாவுக்கும் ஒரிஜினல் பாடல் பிரிவின் இறுதி பட்டியலுக்கு ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வாகியுள்ளதையடுத்து, இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த விழா நடைபெறவுள்ளது. மேலும், ‘நாட்டு நாட்டு’ பாடல்கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளதால், பிரபலங்கள் பலரும் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கும், கீரவாணிக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Kamal Haasan Tweet
Kamal Haasan Tweet

அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” தொடர்ந்து பார் புகழ் பெறுகிறது இந்தியா. ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் குளோப் விருது வென்று தந்திருக்கிறார் கீரவாணி .முன்னமே யூட்யூபில் 11 கோடிப் பார்வைகளைத் தாண்டிய பாடல் இது. வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Ilayiaraja Tweet
Ilayiaraja Tweet

இளையராஜாவும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்வீட்டரில்” கீரவாணி, ராஜமௌலி, ஆர்.ஆர்.ஆர் படக்குழு உங்கள் கடின உழைப்புக்கு, தகுதியான வெற்றிக்கு.. மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

ARrahman Tweet
ARrahman Tweet

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” நம்பமுடியாத ..முன்மாதிரி மாற்றம் அனைத்து இந்தியர்கள் மற்றும் உங்கள் ரசிகர்களிடமிருந்து கீரவாணி சாருக்கு வாழ்த்துக்கள்! ராஜமௌலி சார் மற்றும் ஒட்டுமொத்த ஆர்.ஆர்.ஆர் குழுவிற்கும் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்