சமூக வலைதளங்களில் ஸ்டெர்லைட் ஆலையிடம் பணம் வாங்கியதாக அவதூறு பதிவுகள், காவல் ஆணையர் அலுவலகத்தில் வைகோ புகார்!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ,ஸ்டெர்லைட் ஆலையிடம் தாம் பணம் வாங்கி விட்டதாக, சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் பெயரில் பரப்பப்படும் அவதூறு பதிவுகள் குறித்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடுவதால், ஒவ்வொரு தேர்தலிலும் தம்மை தோற்கடிப்பதற்காக ஸ்டெர்லைட் நிறுவனம் பணம் செலவழிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.