கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு ரூ.248.95 கோடி வருவாய்!

Default Image

கடந்த நிதியாண்டில் 248.95 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம்  வருவாய் ஈட்டியுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 2011ஆம் ஆண்டில் 4.94 லட்சமாக இருந்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை தற்போது 70.52 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, அரசு அலுவலகங்களை காகிதமற்ற அலுவலகமாக மாற்றும் செயலியான e-office, அரசு துறையில் வெளிப்படை தன்மை மற்றும் அலுவலக கோப்புகளை தடையின்றி பரிமாற்றம் செய்துக்கொள்ள வழிவகை செய்யும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளானது, தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையிலும் முன்மாதிரியாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இச்செயலியை படிப்படியாக இதர துறைகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்