தமிழ்நாட்டில் 234 தொகுதிகளும் எனக்கு முக்கியம் – முதலமைச்சர்
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன என முதலமைச்சர் தகவல்.
அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவிகள் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், கொளத்தூர் தொகுதி மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளும் எனக்கு முக்கியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டம் மூலம் 234 தொகுதிகளிலும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. 234 தொகுதிகளும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை செயல்படுத்தி மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன. கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன எனவும் தெரிவித்தார். மேலும், தமிழர்களின் ஆட்சி தமிழர்களின் நலனுக்காக நடைபெறும் ஆட்சி திமுக ஆட்சி என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், கீழடி அருங்காட்சியத்தை விரைவில் திறந்து வைக்கிறேன் எனவும் குறிப்பிட்டார்.