காங்கிரஸின் ‘கை’ சின்னம், ராகுல் காந்தி விளக்கம்.!
காங்கிரஸின் ‘கை’ சின்னத்தின் அர்த்தத்தை, ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பின் போது விளக்கியுள்ளார்.
காங்கிரஸ் உறுப்பினர் ராகுல் காந்தியின் தலைமையிலான பாரத் ஜோதா ஒற்றுமை யாத்திரை கடந்த செப்டம்பர் 7இல் கன்னியாகுமரியில் தொடங்கி ஜனவரி 30 ஆம் தேதி வரை ஸ்ரீ நகரில் நிறைவு பெறுகிறது. நாளை பஞ்சாபில் இந்த யாத்திரை தொடங்கவிருக்கும் நிலையில், ராகுல் காந்தி இன்று அரியானாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ராகுல், காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னத்தின் அர்த்தத்தை விளக்கி கூறினார். மகாத்மா காந்தி, கையை உயர்த்தி, இந்தச் சின்னத்தை நீங்கள் சிவபெருமானின் புகைப்படத்தில் பார்த்திருக்க வேண்டும். இது ‘அபயமுத்ரா’ இதற்கு ‘பயப்படாதே’ என்று அர்த்தம். மேலும் இது தபஸ்யாவின் சின்னமாகும். அதனால் தான் இந்த கைச்சின்னம் காங்கிரஸின் சின்னமாக இருக்கிறது என்று கூறினார்.