இஸ்ரோவின் சாதனையை நாம் அதிகம் பாராட்ட வேண்டும்- ஆனந்த் மஹிந்திரா
இஸ்ரோவின் சாதனையை நாம் அதிகம் பாராட்ட வேண்டும் என்று ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் முதல் சுற்றுப்பாதை விண்வெளி ராக்கெட்(Orbital Space Rocket) ஏவுதல் தோல்வியில் முடிவடைந்த பிறகு, விஞ்ஞானிகள் ராக்கெட் கிட்டத்தட்ட அதன் இலக்கை நெருங்கிவிட்டது, என்று கூறியிருந்தனர். இதனையடுத்து இஸ்ரோவின் ஏவுதள சாதனையை ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார்.
தென்மேற்கு இங்கிலாந்தின் கார்ன்வாலில் உள்ள விண்வெளித் தளத்தில் இருந்து, விர்ஜின் ஆர்பிட் போயிங் 747 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது, ஆனால் ராக்கெட் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்து அதன் ஒன்பது செயற்கைக் கோள்களை வெளியேற்றும் முன்பாக, விஞ்ஞானிகள் ஒரு குளறுபடியைக் கண்டறிந்தனர், இது விண்கலத்தை சுற்றுப்பாதைக்கு செல்லவிடாமல் தடுக்கிறது என்று கூறினர்.
இதனையடுத்து இஸ்ரோவின் வளர்ச்சி குறித்து பேசிய ஆனந்த் மஹிந்திரா, இங்கிலாந்தின் இந்த விண்வெளிப்பயணம் இஸ்ரோவின் விண்வெளி செயல்களில் இருந்து வேறுபட்டது என்றாலும், இஸ்ரோ மேற்கொள்ளும் ஏவுதல் சாதனைகளை நாம் எவ்வளவு அதிகமாக பாராட்டினாலும் அதற்கு மேலும் இஸ்ரோ தகுதியானது என்று மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார்.