மெட்ரோ விபத்து.! தாய் – மகன் உயிரிழப்பு.! 20 லட்சம் இழப்பீடு.!
பெங்களூரு மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தாய் – மகன் குடும்பத்திற்கு 20 லட்சம் இழப்பீடு தொகையை அறிவித்துள்ளது மெட்ரோ கட்டுமான நிர்வாகம்.
பெங்களூருவில் தற்போது மெட்ரோ கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்போது ஒரு பகுதியில் மெட்ரோவுக்காக நிறுவப்பட்டு இருந்த தூண் சாலையில் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த சாலையில் அந்த சமயம் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது விழுந்தது. அதில் வாகனம் ஓட்டிய தாய் மற்றும் அவரது 2 வயது மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அந்த வாகனத்தில் பயணம் செய்த கணவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம் இழப்பீடு தொகையினை அறிவித்துள்ளது. மேலும், தாங்கள் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.