முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சத்யராஜ் பாராட்டு!
முதலமைச்சரின் புன்னகையில் பெரியாரின் சுயமரியாதை சுடர்விட்டது என்று நடிகர் சத்யராஜ் பாராட்டு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றைய நிகழ்வுகளை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். சட்டசபையில் நேற்றைய நிகழ்வின்போது முதலமைச்சரின் புன்னகை என்னை வெகுவாக கவர்ந்தது என கூறியுள்ளார்.
முதலமைச்சரின் புன்னகையில் பெரியாரின் சுயமரியாதை சுடர்விட்டது என்றும் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயம் பளிச்சிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு எனும் மாநிலத்தில் வாழும் ஒரு சாதாரண குடிமகனாக அந்த புன்னகையில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன் எனவும் சத்யராஜ் பாராட்டியுள்ளார்.