மெட்ரோ பணியின் போது தூண் சரிந்து விபத்து.! தாய், மகன் பலி.!

Default Image

பெங்களூருவில் மெட்ரோ பணிக்காக எழுப்பப்பட்டிருந்த தூண் சரிந்து விழுந்ததில் சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாய் மற்றும் 2 வயது மகன் உயிரிழந்தனர். 

பெங்களூருவில் தற்போது மெட்ரோ கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்போது ஒரு பகுதியில் மெட்ரோவுக்காக நிறுவப்பட்டு இருந்த தூண் சாலையில் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த சாலையில் அந்த சமயம் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது விழுந்தது. அதில் வாகனம் ஓட்டிய  தாய் மற்றும் அவரது 2 வயது மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தூணானது இரும்பு கம்பிகளை கொண்டு எழுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்