ஒன்றிய அரசியல் என அழைப்பதில் தவறில்லை.! ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து.!
ஓன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை. ஆனால், அது அரசியல் ஆக்கம்போது தான் பிரச்சனை எழுகிறது. – ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவி பேச்சு.
இன்று ஆளுநர் மாளிகையில் இந்திய குடிமையியல் பணிக்கான நேர்முக தேர்வில் பங்கேற்க உள்ள 80 நபர்களுடன் ஆளுநர் ரவி இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை. ஆனால், அது அரசியல் ஆக்கம்போது தான் பிரச்சனை எழுகிறது என குறிப்பிட்டார். மேலும், மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதனை தான் குடிமைபணியியல் அதிகாரிகள் கேட்க வேண்டும் என குறிப்பிட்டார்.
மத்திய அரசின் மூலம் மத்திய அரசுக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் இந்திய குடிமையியல் அதிகாரிகள். மத்திய அரசின் முடிவுகள் தங்கள் கருத்துக்கு எதிராக இருந்தாலும் அதனை தான் செயல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டு அந்த கலந்துரையாடலில் ஆளுநர் ரவி பேசினார்.